காயமடைந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் காயமடைந்த மீனவர் ஒருவர் கடற்படையினரின் உதவியுடன் சிகிச்சைக்காக இன்று (ஜூன் 14) கரைக்கு கொண்டுவரப்பட்டார்.

மேற்படி மீனவர் தொடர்பாக மீன்பிடி மற்றும் நீர்வள திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை கடற்படையின் தெற்கு பிராந்திய கட்டளையகத்தின் அதிவேக தாக்குதல் படகின் மூலம் குறித்த மீனவர் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டன. இம்மீனவர் "ஜனித் புதா" மீன்பிடி படகின் மூலம் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சென்றிருந்தவர்களில் ஒருவராவார். கடற்படை படகின் மூலம் காலி கலங்கரை விளக்கிலிருந்து 33 கடல் மைல் தொலைவில் சென்று முதலுதவிகள் அளிக்கப்பட்டு, கடற்படை படகின் மூலம் காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்கென உடனடியாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

மேலும் இலங்கை சுற்றி உள்ள கடல் பயன்படுத்திகின்ற மீன்பிடி சமுதாயத்திற்கு ஏற்படுகின்ற எந்தவித ஆபத்துக்கும் உதவ கடற்படை தயாராக உள்ளதுடன் இவ்வாரான சுகயீனமுற்றிருந்த மீனவர்களைசிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர எதிர்காலத்திலும் கடற்படையினர் ஆதரவு வழங்கும்.