946.8 கிலோ கிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் கடற்படையினரால் கைது

கடற்படையினரால் இன்று (2019 ஜூன் 16) ஆம் திகதி மன்னார், தாரபுரம் பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 946.8 கிலோ கிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதன் பிரகாரமாக வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னார், தாரபுரம் பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 946.8 கிலோ கிராம் பீடி இலைகள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பீடி இலைகள் 30 பொதிகள் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் இந்த பீடி இலைகள், குறித்த இடத்தில் இருந்து அங்கிருந்த வீட்டிட்கு கடத்திச்சென்ற கரத்தை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் 25,48, மற்றும் 60 வயதான மன்னார், தாரபுரம் பகுதிகளில் வசிப்பவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,இந்த பீடி இலை தொகை மற்றும் நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் இந்த வருடத்தில் மாத்திரம் பீடி இலை 14000 கிலோ கிராமிற்கு அதிகமான தொகை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாரான சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக கடற்படை தொடரந்து செயல்பட்டு வருகின்றது.