இந்திய கடற்படைக்கு சொந்தமான “ரன்வீர்” எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இந்திய கடற்படையின் “ரன்வீர்” கப்பல் இன்று (ஜூன் 18) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

கப்பல் துறைமுகத்துக்கு வந்தடைந்த பின் கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் செதன் சந்த்ர்ரெவு மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவை சந்தித்தார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

146 மீட்டர் நீளம் கொண்ட இக் கப்பல், 4560 டன் கொள்ளவு கொன்டுள்ளது. மூன்று நால் விஜயத்தை மேற்கொன்டு வந்தடைந்த இக் கப்பலின் குழுவினர் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பல திட்டங்களில் கழந்துகொள்வார்கள்.

மேலும் 273 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ள இக் கப்பல் 2019 ஜூன் 20 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்படவுள்ளது.