1638.8 கிலோ கிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் (03) கடற்படையினரால் கைது

கடற்படையினரால் இன்று (ஜூன் 18) கற்பிட்டி, களப்பு பகுதிகளில் மற்றும் மன்னார் தால்பாடு கடற்கரையில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 1638.8 கிலோ கிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் (03) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதன் பிரகாரமாக வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கற்பிட்டி, களப்பு பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 1160 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இருவர் (02) இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் 35 மற்றும் 42 வயதான கற்பிட்டி பகுதிகளில் வசிப்பவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பீடி இலைகள் டிங்கி படகு மூலம் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த பீடி இலை தொகை மற்றும் சந்தெகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு சுங்கத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதே போன்ற வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் மன்னார் தால்பாடு கடற்கரையில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 15 பொதிகளாக இருந்த 478.8 கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர் 28 வயதான மன்னார் பல்லெமுனெ பகுதிகளில் வசிப்பவராக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பீடி இலை தொகை மற்றும் சந்தெகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பானம் சுங்கத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் இந்த வருடத்தில் மாத்திரம் பீடி இலை 15500 கிலோ கிராமிற்கு அதிகமான தொகை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாரான சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக கடற்படை தொடரந்து செயல்பட்டு வருகின்றது.