மட்டக்களப்பு களப்பு பகுதியில் 24 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்பு

இன்று (ஜூன் 20), மட்டக்களப்பு களப்பு பகுதியில் 100 மீட்டர் நீளமுள்ள அங்கீகரிக்கப்படாத 24 மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்டக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள், இன்று மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையன் போது, இவ்வாறு தடைசெய்யப்பட்ட 24 மீன்பிடி வலைகளை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து, இந்த அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் மேலதிக சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு மீன்வள உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டன.