கடற்படை உலக நீர் தினத்தை கொண்டாடுகிறது

ஜூன் 21 ஆம் திகதி வரும் உலக நீர் தினத்திற்கு நடைபெற இருக்கும் இலங்கை கடற்படை ஹைட்ரோகிராஃபிக் சர்வீஸ் கடற்படை அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு திட்டத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் ஆதரவில் இன்று (20) கொழும்பில் நடத்தியது.

கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை கடற்படையின் கடற்படை ஹைட்ரோகிராபிக்ஸ் பிரிவின் தலைவர் ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி மற்றும் கடற்படை ஹைட்ரோகிராபிக்ஸ் பிரிவு ஆகியவை கடற்படை அதிகாரிகளுக்கு நீர்நிலை நடவடிக்கைகள் தொடரப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து. இந் நிகழ்ச்சி இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரமயில் அட்மிரல் சோமதிலகே திசானநாயக்க மண்டபத்தில் நடை பெற்றது.

இந்நிகழ்ச்சியில் கடற்படைத் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகெதென், கடற்படையின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் கடற்படை ஹைட்ரோகிராபிக்ஸ் பிரிவுடன் இணைந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.