உல்லக்கலை களப்பு பகுதியில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்பு

இன்று (ஜூன் 21) உல்லக்கலை களப்பு பகுதியில் கடற்படையினர் 40 மீட்டர் நீளமுள்ள 24 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை மீட்டுள்ளகது.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால், உல்லக்கலை களப்பு பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட இந்த மீன்பிடி வலைகளை மீட்டுள்ளனர்.

இதையடுத்து, இந்த அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முதூர் மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.