பீடி இலைகள் 335.7 கிலோ கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது

கடற்படை வீரர்கள் சிலரினால் யாழ்ப்பாணத்தில் பரைத்தீவின் கிழக்கு பகுதியில் 2019 ஜூன் 22 அன்று 335.7 கிலோ பீடி இலைகளை மீட்கப்பட்டுள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணத்தில் உள்ள பரைத்தீவின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, வடக்கு கடற்படைத் தளத்துடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் ஒரு குழுவினரால் இந்த பீடி இலைகள் மீட்கப்பட்டன.

மேலும் பீடி இலைகள் மேலதிக விசாரணைக்கு யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.