939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு

இன்று (ஜூன் 24) மன்னார் நடுகுடா பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படை வீரர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 45 பொதிகளை கொண்ட பீடி இலைகளை இவ்வாறு கண்டுபிடித்துள்ளனர் மேலும் இது மன்னார் நாடுகுடாவின் கடற்கரை பகுதியில் கைவிடப்பட்டிருந்ததாக தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கான யாழ்ப்பாணம் சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் இதுவரை 16,500 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.