1689.6 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது

கடற்படையினரால் 2019 ஜூன் 26 ஆம் திகதி மன்னார், ஓலுதுடுவாய் கடற்கரையில் வைத்து 1689.6 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன் பிரகாரமாக வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னார், ஓலுதுடுவாய் கடற்கரையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 646.7 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கடற்படையினரினால் மேலும் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 33 பொதிகளாக இருந்த 1042.9 கிலோகிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர் 45 வயதான எருக்குழம்பிட்டி பகுதியில் வசிப்பவராக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பீடி இலை தொகை மற்றும் சந்தெகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் இந்த ஆண்டுக்குழ் மாத்திரம் பீடி இலைகள் 18,000 கிலோ கிராமிற்கு அதிகமான தொகை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாரான சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக கடற்படை தொடரந்து செயல்பட்டு வருகின்றது.