கடற்படையால் 126.5 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டள்ளது

இன்று (ஜூன் 29) மன்னார் ஒலுத்துடுவாய் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கடற்படை வீரர்கள் 126.5 கிலோ கிராம் பீடி இலைகளை கண்டுபிடித்தனர்.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் இந்த பீடி இலைகளை 04 பொட்டலங்களில் வைத்திருந்ததைக் கண்டுபித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பீடி இலைகள் மேற்படி சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டள்ளது.

கடந்த சில நாட்களாக மன்னார் பிராந்தியத்தில் கடற்படையினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 3,500 கிலோ கிராம் பீடி இலைகளை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இந்த வகையான சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படையின் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.