988.4 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு

கடற்படை வீரர்கள் ஜூன் 29 அன்று மன்னார் நடுகுடாவில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 988.4 கிலோ பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்ட்டள்ளன.

வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் மன்னர், நடுகுடா கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்டசோதனை நடவடிக்கையின் போது 20 பொதிகளில் இருந்த பீடி இலைகளை கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று காலை அதே பிராந்தியத்தில் அருகிலுள்ள காட்டிட்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 126.5 கிலோ பீடி இலைகளையும் கடற்படை கண்டுபிடித்தது. இதுபோன்று, வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் கடந்த சில நாட்களாக மன்னார் பிராந்தியத்தில் நடத்திய சோதனைகளில் போது 4,500 கிலோ கிராம் பீடி இலைகளை கைப்பற்றியுள்ளனர்.