புல்மோடை, அரிசிமலே பகுதியிலிருந்து பல நீர் ஜெல் குழாய்கள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் 2019 ஜூன் 30 அன்று புல்மோடையில் அரிசிமலே பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்துப் பணியின் போது, பல நீர் ஜெல் குழாய்களைக் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் படி கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள், புல்மோடை அரிசிமலே கடற்கரையில் நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் போது, ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல நீர் ஜெல் குழாய்களை மீட்டெடுக்க முடிந்தது. அதன்படி, 04 வாட்டர் ஜெல் குழாய்கள், ஒரு அடி நீள பாதுகாப்பு உருகிகளின் 24 பாதுகாப்பு துண்டுகள், 116 மின்சார அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் 04 தீப்பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த பொருட்கள் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கடற்கரை பகுதிக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.