கிழக்கு கடற்படை கட்டளை இரத்த தான வேலைத்திட்டமொன்றை நடத்தியது

கிழக்கு கடற்படை கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான வேலைத்திட்டம் இன்று (ஜூலை 01) திருகோணமலை பொது மருத்துவமனையில் நடைபெற்றது.

இரத்த வங்கியின் அவசர இரத்த தேவையை பூர்த்தி செய்வதற்காக கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்ஹ வழிகாட்டுதலின் கீழ் இந்த இரத்த தானம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் 60 க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் தானாக முன்வந்து இரத்த தானம் செய்துள்ளனர்.