கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி (JCET) வெற்றிகரமாக நிறைவு

2019/1 கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சியின் (JCET) சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு 2019.ஜூலை 05 ஆம் திகதி திருகோணமலை இலங்கை கடற்படை, சிறப்பு படகு படையனி அவைக்களத்தில் இடம்பெற்றது.

இங்கு பிரதம அதிதியாக கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் ஜயந்த குலரத்ன கழந்துகொன்டுள்ளார். சிறப்பு படகு படையனியின் 24 பேர், 4 வது விரைவு தாக்குதல் படகுகள் குழுவின் 12 பேர் உடபட இலங்கை கடற்படையின் 36 பேர் இந்த பாடத்திட்டத்தில் கழந்துகொன்டுள்ளதுடன் அமெரிக்க கடற்படையின் 19 வது சிறப்பு படைத் பிரிவின் 10 வீரர்களினால் இப் பாடத்திட்டம் மேற்கொள்ளப்பட்டன.

அதன் படி, இப் பயிற்சி மூலம் மனித உரிமைகள், நில தற்காப்பு சட்டம், தந்திரோபாய பாதுகாப்பு கட்டளை பாதுகாப்பு, இலக்கு படப்பிடிப்பு, கடல் ஏற்றுமதி, இராணுவ நிர்ணயம், தொழில்முறை திறன் மேம்பாடு ஆகியவற்றை அமெரிக்க கடற்படை உறுப்பினர்ளுடன் இலங்கை கடற்படை வீரர்கள் பரிமாற்றப்பட்டன.

இன் நிகழ்வுக்காக இலங்கையின் அமெரிக்க தூதரகத்தின் லெப்டினன்ட் கமாண்டர் ஜெனதன் பாக், கிழக்கு கடற்படைத் கட்டளையின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.