நைனதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் கோவிலின் வருடாந்த விழாவை நடத்த கடற்படை ஆதரவு

நைனதீவில் அமைந்துள்ள “ஸ்ரீ நாகபூசனி அம்மன் கோயிலின் வருடாந்த விழா” 2019 ஜூலை 02 முதல் தொடங்கியது. இந்த விழாவை வெற்றிபெற வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களினால் பாதுகாப்பு மற்றும் சுகாதார சேவைகளை வழங்கப்படுகின்றது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரிலும், வடக்கு கடற்படைப் பகுதி தளபதி ரியர் அட்மிரல் கபிலா சமரவீரவின் மேற்பார்வையுடனும், கட்டளையின் கடற்படையினர் இத் திருவிழாவை வெற்றிகரமாக ஆக்குவதற்கு வி.ஐ.பி-க்களுக்கு கடல் போக்குவரத்து வசதிகளை வழங்குதல், குரிகட்டுவன் முதல் நைனதிவு வரை படகு சேவையை ஒருங்கிணைத்தல், பக்தர்களுக்கு குடிநீர் வழங்குதல், பாதுகாப்பான குளியல் இடங்களை ஏற்பாடு செய்தல், பக்தர்களுக்கு உயிர் காக்கும் உதவிகளை வழங்குதல் ஆகிய பல வழிகளில் தங்களுடைய உதவிகளை வழங்குகிறார்கள். மேலும் இச் செயற்பாடுகளில் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பாளராக இலங்கை கடற்படை கப்பல் எலாரவின் கட்டளை அதிகாரி பணியாற்றிகிரார்.

மேலும், 17 ஜூலை 2019 அன்று நிறைவடையுள்ள இந்த வருடாந்த விழாவின் முடிவு வரை கடற்படை தொடர்ந்து உதவி வழங்கும்.