4 வது வேக தாக்குதல் படகு படையின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் தம்மிக விஜேவர்தன கடமையேற்பு


கடற்படையின் முன்னணி போர் படகு படையான 4 வது வேக தாக்குதல் படகு படையின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் தம்மிக விஜேவர்தன இன்று (ஜூலை 08) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

அதன் படி 4 வது வேக தாக்குதல் படகு படையின் முன்னாள் கட்டளை அதிகாரியான கேப்டன் இந்திக பிரேமரத்னவினால் கடற்படை கப்பல்துறையில் 4 வது வேக தாக்குதல் படகு படையின் கட்டளை அதிகாரி அலுவலகத்தில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டன. அங்கு புதிய கட்டளை அதிகாரி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.