சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) நபர்கள் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 நபர்களை 2019 ஜூலை 17 ஆம் திகதி யாழ்ப்பாணம், வெத்தலகேனி பகுதியில் வைத்து கடற்பயினரினால் கைது செய்யப்பட்டது.

அதன் படி வடக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழுவொன்று வேத்தலகேணி பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது, இந்த சந்தேக நபர்களை அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களுடன் கடற்படை ஒரு டிங்கி, ஒரு வெளிப்புற மோட்டார், 75 மீ நீளமுள்ள அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலை மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன் 600 கிலோ ஆகியவற்றை கைப்பற்றியது.

கைது செய்யப்பட்ட நபர்கள் டிங்கி, வெளிப்புற மோட்டார், அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலை மற்றும் சட்டவிரோதமாக பிடித்த மீன் ஆகியவற்றுடன் யாழ்ப்பாணம் மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், சட்டவிரோத மீன்பிடி வழிகளைப் பயன்படுத்துவது இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளின் கடல் வளங்களை அழிக்க அச்சுறுத்துகிறது, இதுபோன்ற, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்ற மக்கள் கைது செய்வதற்கும், தேவையான சட்ட நடவடிக்கைகளுக்கு அவர்களை ஆஜர்படுத்துவதுக்கும் கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.