காலி, ரூமஸ்ஸல கடலில் பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்த 09 பேரை கடற்படையினரினால் மீட்பு

காலி, ரூமஸ்ஸல கடலில் பாதிக்கப்பட்ட ‘ஸ்ரீ லங்கா கிலோரி’ என்ற கப்பலில் இருந்த 09 பணியாளர்களை 2019 ஜூலை 18 ஆம் திகதி கடற்படையினரினால் மீட்டுள்ளது.

காலி துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிட்ட கப்பல் பலத்த காற்று மத்தியில் நங்கூரத்திலிருந்து ரூமஸ்ஸல கடல் பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டது. இதை தொடர்பான தகவல்கள் கிடைத்ததும், கடற்படை உடனடியாக ஒரு கடற்படை கப்பல் மற்றும் நிவாரண குழுவை அந்த இடத்திற்கு அனுப்பியது. அதன்படி, கடற்படையினரினால் படகில் இருந்த குழுவினரை மீட்டு காலி துறைமுகத்திற்கு அழைத்துச் வரப்பட்டனர்.

மேலும், இலங்கையைச் சுற்றியுள்ள கடலைப் பயன்படுத்தும் கடல் மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு உதவ கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.