தென்கிழக்கு கடற்படை கட்டளையில் புதிய நீச்சல் குளத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

தென்கிழக்கு கடற்படை கட்டளையில் புதிய நீச்சல் குளத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு தென்கிழக்கு கடற்படை கட்டளையில் தளபதி ரியர் அட்மிரல் நோயல் கலுபோவிலவின் தலைமையில் 2019 ஜூலை 18 அன்று இலங்கை கடற்படை கப்பல் மகாநாகவில் இடம்பெற்றது.

அதன் படி, நீச்சல் குளத்தின் கட்டுமானப் பணிகள் 03 மாதங்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுடன் இக் கட்டளையின் இணைக்கப்பட்டுள்ள கடற்படை வீரர்களின் நீச்சல் திறனை மேம்படுத்த உதவும். மேலும் இந் நிகழ்வில் தென்கிழக்கு கடற்படை கட்டளையில் துணை தளபதி மற்றும் இலங்கை கடற்படை கப்பல் மகாநாகவில் கட்டளை அதிகாரி உட்பட தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர்.