உள்ளூர் கள்ளச் சாராயத்துடன் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் 2019 ஜூலை 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் புத்துக்காடு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனையின் போது உள்ளூர் கள்ளச் சாராயத்துடன் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டனர்.

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் புத்துக்காடு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தேசிய கள்ளச் சாராயம் 10 போத்தல்களுடன் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டனர். கடற்படையின் மேலதிக விசாரணையில் போது அவர்களிடமிருந்து 3 கிலோ மான் இரைச்சி கண்டுபிடிக்கப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட 46 வயதான குறித்த பெண் மற்றும் 30 வயதான ஆண் அப்பகுதியில் வசிப்பவர் எனக் கூறப்படுகிறது. கைதுசெய்யப்பட்ட பெண், ஆண், மதுபானம் மற்றும் மான் இரைச்சி ஆகியவற்றை கிலினோச்சி கலால் துறைக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.