தலை மன்னாரில் 717.82 கிலோ பீடி இலைகளை கடற்படை கண்டுபிடித்தது

கடற்படையினரினால் தலை மன்னார் மணல் கரைகளில் 2019 ஜூலை 23 ஆம் திகதி நடத்தப்பட்ட தேடலின் போது பீடி இலைகள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழுவொன்று, தலைமன்னரில் மணல் கரைகள் 05 மற்றும் 07 க்கு இடையே மேற்கொன்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது 717.82 கிலோ பீடி இலைகள் அடங்கிய 13 தொகுப்புகள் கடலில் மிதந்து கிடந்தன. குறித்த பீடி இலைகள் பொதி யாழ்ப்பாண சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மெலும், தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகள் மூலம் கடந்த இரண்டு நாட்களில் பல பீடி இலை கடத்தல் முயற்சிகளைத் தடுத்தன. மேலும், 2019 ஜூலை 21 ஆம் திகதி தல்பாடு கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட தேடலின் போது 05 பீடி இலை கடத்தல்காரர்களையும் கடற்படை கைது செய்தது. இது தவிர, சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கடற்படை, 2019 ஆம் ஆண்டில் இதுவரை 24,500 கிலோ எடை கொண்ட பீடி இலைக் கைப்பற்றியது.