சட்டவிரோதமாக வைத்திருந்த கடல் ஆமை கடலுக்கு விடுவிக்க கடற்படையின் பங்களிப்பு

மல்லாகம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 2019 ஜூலை 23 ஆம் திகதி ஒரு நபர் சட்டவிரோதமாக வைத்திருந்த கடல் ஆமை கடலுக்கு விடுவிக்க கடற்படை பங்களித்தது.

அதன்படி, சட்டவிரோதமாக கடல் ஆமை வைத்திருந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்து மல்லாகம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.கடல் ஆமையை கடலுக்கு விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் இலவாலி காவல்துறை, வனவிலங்குத் துறை மற்றும் இலங்கை கடலோர காவல்படை ஆகியவற்றுடன் இனைந்து கடற்படையினர் வட கடலில் கடல் ஆமையை பாதுகாப்பாக கடலுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் கருத்தின் கீழ் ‘நீல ஹரித சங்கிராமய ' என்ற கருத்தின் கீழ் ஆமை பாதுகாப்பு திட்டத்தையும் இலங்கை கடற்படை நடத்தி வருகிறது. கடற்கரைகளில் பாதுகாக்கப்பட்ட ஏராளமான ஆமைகளும் கடலுக்கு விடுவிக்கப்பட்டன.

இந்த முறையில், இலங்கை கடற்படை தொடர்ந்து நாட்டின் கடல் வளங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.