அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கற்றாழை தாவரங்கள் கொண்டு செல்லும்போது கடற்படையினரினால் கைது

இன்று (ஜூலை 24) காலை பேசாலை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கடத்தப்பட்ட கற்றாழை தாவரங்களுடன் இரண்டு (02) நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.

அதன் படி, வட மத்திய கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படையினரினால் மன்னார், பேசாலை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 22 பொதிகளாக உள்ள 618 கிலோ கிராம் கற்றாழை தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த கற்றாழை தாவரங்கள் டிங்கி மூலம் கடத்திகொண்டிருக்கு போது இவ்வாரு கைது செய்யப்பட்டன.

கைது செய்த நபர்கள் மன்னார், பேசாலை பகுதியில் வசிக்கின்ற 32 மற்றும் 47 வயதானவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர். கைது செய்த நபர்கள், கற்றாழை தாவரங்கள் பொதி மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவதுர வன பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.