தெற்கு கடற்படை கட்டளையின் கடற்கரைகளை சுத்தம் செய்வதற்கான மற்றொரு வேலைத்திட்டம்

தெற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை வீரர்கள் இன்று (ஜூலை 27 ) தெற்கு கடற்படை கடற்கரையை உள்ளடக்கிய பகுதியில் ஒரு தூய்மைப்படுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக தொடங்கினர் .

அதன்படி , தெற்குக் கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் ‘தக்ஷன’, இலங்கை கடற்படை கப்பல் ‘நிபுன’ மற்றும் இலங்கை கடற்படை கப்பல் ' ருஹுண ' மற்றும் அதன் அதிகாரிகள் உட்பட கடற்படை வீரர்களின் பங்கேற்பின் பின்னர் ஹபராதுவ, பூஸ்ஸ, மற்றும் தங்கல்லையை சுற்றியுள்ள கடற்கரைகளை சுத்தம் செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இயற்கை காரணங்களினாலும் மற்றும் மனித நடவடிக்கைகளின் விளைவாக பெருமலவில் மாசுபடுத்தப்பட்ட கடற்கரை கடற்படையினரால் மிகவும் அர்ப்பணிப்புடன், கழிவுகள் இல்லாத கடற்கரை சூழலாக மாற்றபட்டது.

இன்னும், அனைத்து கடற்படை கட்டளைகளிலும் பல சூழல் நட்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன , மேலும் ஒரு சுத்தமான கடற்கரையை பராமரிக்க கடற்படை எப்போதும் உறுதிபூண்டுள்ளது . கடற்படையினரின் அனைத்து கடற்படை தளங்களிலும் வாராந்திர கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டங்களை நடப்படுகின்றது.


பூஸ்ஸ கடற்கரைகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம்


ஹபராதுவ கடற்கரைகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம்