கேரள கஞ்சா கொண்ட நபரை கைது செய்ய கடற்படையின் உதவி

ஜூலை 27 அன்று மாத்தரை வல்கமவில் நடத்தப்பட்ட சோதனையின் போது கேரளா கஞ்சா வைத்திருந்த சந்தேக நபரை கடற்படை மற்றும் பொலிஸ் அதிரடிப்படை இணைந்து கைது செய்துள்ளனர்.

கோக்மதுவ பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் 180 கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சந்தேக நபரால் விற்க தயாரான நிலையில் இருந்து ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் 23 வயதான அதே பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கஞ்சாவுடன் மாத்தரை பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டார். போதைப்பொருள் விற்பனையாளர்களைக் கைது செய்வதற்கும், இந்த அச்சுறுத்தலுக்கு இரையாகிவிட்டவர்களை சட்ட நடவடிக்கைகளுக்காக உற்பத்தி செய்வதற்கும் இலங்கை கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு விழிப்புணர்வைச் செய்து வருகிறது.