கிலிநாச்சியில் உள்ள மண்டகல் பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட நபர்கள் கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் உள்ள மண்டகல் ஆறு பகுதியில் 2019 ஜூலை 28 அன்று கடற்படை நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் உள்ள மண்டகல் ஆறு பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது வடக்கு கடற்படைக் கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படையினரால் சந்தேகத்திற்கிடமான நடத்தையில் இருந்த இந்த நபர்கள் கண்கானிக்கப்பட்டு பரிசோதித்த பின்னர் இந்ந நபர்கள் புதையல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக உருதி செய்யப்பட்டுள்ளது .அங்கு அந்த நபர்களையும் புதையல் அகழ்விற்க்கு பயன்படுத்திய உபகரணங்களும் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள் 29, 34, 35, 47 மற்றும் 48 வயதுடைய அவிஸ்சாவெல்ல மற்றும் பாதுக்க பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த பாரம்பரிய கலைப்பொருட்களைப் பாதுகாப்பது இலங்கையின் கடமையும் பொறுப்பும் ஆகும், மேலும் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதில் கடற்படையினர் தமது கவனத்தை செலுத்துகின்றனர்.