போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்ய கடற்படையின் உதவி

இலங்கை கடற்படை போலீஸ் அதிரடிப்படையுடன் இணைந்து போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் விற்பணை செய்யும் நபர்களை ஜூலை 29 அன்று சிலாபம் பங்கடெனியா பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

அதன்படி, இந்த தேடல் நடவடிக்கை பங்கடேனியா வட்டாரத்தில் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மற்றும் புத்தளத்தில் உள்ள போலீஸ் அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான நபர் ஓடிய மோட்டார் சைக்கிளை துருப்புக்கள் தடுத்தனர். இருப்பினும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது மோட்டார் சைக்கிளை விட்டு வெளியேறினார். மேலும் தேடியபோது, பைக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 190 கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் கண்டுபிடித்தனர். சந்தேக நபர் விற்பணைக்காக கஞ்சாவை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை சிலாபம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பதில், இலங்கை கடற்படை அடிக்கடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு சமீபத்திய காலங்களில் பல போதைப்பொருள் பாவனையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள துணைபுரிகின்றது.