சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையினரால் கைது

இன்று (ஜூலை 30) காலை முல்லைத்தீவு, குருகண்டத மற்றும் கோகிலாய் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள், குருகண்த மற்றும் கோகிலாய் கடல் பகுதிகளில் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, இந்த சந்தேக நபர்கள் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களுடன் கடற்படை 02 டிங்கிகள், 02 வெளிப்புற மோட்டார்கள், 540 அடி அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலை மற்றும் 255 கிலோ சட்டவிரோதமாக பிடிபட்ட மீன்களையும் கைப்பற்றியது. சந்தேகநபர்கள் 29, 41 மற்றும் 47 வயதுடைய புல்முடை மற்றும் கோகிலாய் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் டிங்கிகள், வெளிப்புற மோட்டார்கள், அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களுடன் முல்லைத்தீவிலுள்ள உள்ள மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.