கிலாலி தடாகத்தில் கடற்படையினரால் நடத்தப்பட்ட உயிரக்காப்பு திட்டம்

கிலாலி, சங்குபிட்டி பகுதியில் வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ப்பான வேலைத்திட்டம் ஒன்று கடற்படை வீரர்களினால் ஜூலை 30 அன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

பங்கேற்பாளர்களுக்கு நீச்சல், பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் உயிர் காக்கும் உபகரணங்கள் மற்றும் நீச்சல் நுட்பங்களைப் பயன்படுத்தி விரிவான அறிவு வழங்கப்பட்டது. இது அவர்களுக்கு அவசரகாலத்தில் கடற்படை வீரர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அறிய வாய்ப்பளித்தது.

இந்த பயிற்சியில் கடற்படை சிறப்பு படகுப்படை, கடற்படை விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவு (4RU) மற்றும் டைவிங் பிரிவு பங்கேற்றன.