கடற்படை நடவடிக்கைகளின் போது பீடி இலைகள் மீட்ப்பு

கடற்படை வீரர்கள், கச்சைத்தீவு மற்றும் வடக்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 2019 ஜூலை 31 அன்று 50 கிலோ பீடி இலைகளை மீட்டனர்.

கச்சைத்தீவின் தெற்குப் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, வடக்கு கடற்படைத் தளத்துடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழு 30 கிலோ கிராம் பீடி இலைகளைக் கொண்ட ஒரு பொதியை கண்டுபிடித்துள்ளது.

மேலும், வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஒரு விரைவான தாக்குதல் கப்பலில் கடற்படை வீரர்கள் நெடுந்தீவிற்க்கு வெளியே கடல்களில் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமான மற்றொரு பொதி மிதப்பதைக் கண்டனர். பொதி சோதனை செய்யும் போது அதில் 20 கிலோ பீடி இலைகள் கண்டுபித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளை யாழ்ப்பாண சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகளின் விளைவாக பீடி இலைகளை எடுத்துச் செல்வதை கடத்தல்காரர்கள் விட்டுச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதற்கிடையில், இலங்கையின் வடமேற்கு கடல்களில் 2019 ஜூலை 29 ஆம் திகதி இலங்கை கடற்படை 2379 கிலோ பீடி இலைகளுடன் 06 இந்திய பிரஜைகளை ஏற்றிச் செல்லும் ஒரு மீன்பிடித் டோலரை தடுத்தது.