உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக கடற்படை உயிர் காக்கும் குழுக்கள் தயார்

காலி பகுதியில் கடற்கரைகளுக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதற்காகவும், இயற்கை அழகைக் காணவும் இலங்கை கடற்படை பல உயிர் காக்கும் குழுக்களை நிறுத்தியுள்ளது.

அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரிலும், தளபதி தெற்கு கடற்படை பகுதி ரியர் அட்மிரல் கசபா பால் மேற்பார்வையுடனும், கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவில் (4RU) இணைக்கப்பட்டுள்ள உயிர் காக்கும் குழுக்கள், காலி, ருமசாலாவில் உள்ள ஜங்கிள் பீச் மற்றும் சுடதுவெல்ல கடற்கரைகளில் உள்ளனர்.

மேலும் இது பாடசாலை விடுமுறை காலம் என்பதால், ரூமஸ்ஸல பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் ஆபத்தான இடங்களில் செல்ஃபி புகைப்படங்கள் எடுப்பது, ஆபத்தான இடங்களில் நீரில் குளிப்பது மற்றும் விளையாடுவது போன்ற போக்கைத் தவிர்க்க கடற்படை உயிர் காக்கும் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அறிமுகமில்லாத இடங்களில் குளிப்பதைத் தவிர்க்கவும், அது பாதுகாப்பானது எனக் குறிக்கப்பட்ட இடங்களில் குளிக்கவும். மேலும், சுற்றியுள்ள மற்றவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அதே வேளையில் ஒவ்வொருவரும் தங்களது சொந்த பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளை பார்வையிடும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், நாட்டின் ஏரிகள் மற்றும் ஆறுகளின் அழகிற்காகவும் இலங்கை கடற்படை தொடர்ந்து விழிப்புடன் இருக்கிறது.