கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவர கடற்படை உதவியது

இரனை தீவில் வைத்து பாம்பு கடித்ததால் ஆபத்தான நிலையில் இருந்த ஒரு மீனவரை இலங்கை கடற்படை கடல் வழியாக கரைக்கு கொன்டுவந்து ஆகஸ்ட் 06 ஆம் திகதி முலங்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் படி, இரனைதீவு கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு மீனவர் பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் இருப்பதைக் கவனித்த கடற்படையினர் அவரை உடனடியாக கரைக்கு கொண்டு வருவதற்காக கடற்கரை ரோந்து படகொன்றை,மருத்துவ மாலுமியுடன் அனுப்பப்பட்டன.

ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிக்கு அடிப்படை முதலுதவி வழங்கி பாதுகாப்பாக கப்பலில் கரைக்கு கொண்டு வரப்பட்டார், மேலும் அவர் கடற்படை ஆம்புலன்ஸ் மூலம் முலங்காவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

64 வயதான குறித்த நபர் ஈரானமாதா பகுதியில் வசிக்கின்றவர் என கண்டரியப்பட்டுள்ளதுடன் வட மத்திய தலைமையகத்தின் உத்தரவின் பேரில் இரனதீவில் கடற்படை வீரர்கள் மேற்கொண்ட விரைவான நடவடிக்கைகளின் விளைவாக அவரது வாழ்க்கை மீட்க முடிந்தது.

மேலும், இலங்கை கடற்படை யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரைச் சுற்றியுள்ள தீவுகளின் வசிக்கின்ற மக்களுக்கு இன்றைய தேவைகளில் பாதுகாப்பையும் உதவிகளையும் வழங்குகிறது.