சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு நபரை கடற்படையினரினால் கைது

முல்லைதீவு, நாயரு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு நபர், 2019 ஆகஸ்ட் 6 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஒரு துரித தாக்குதல் படகு மூலம் நாயரு கடலில் நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் போது, மின்சார விளக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக இந்த சந்தேக நபரைக் கைது செய்யப்பட்டது. அங்கு கடற்படை மூலம் ஒரு டிங்கி, ஒரு வெளிப்புற மோட்டார், 5 பல்புகள் மற்றும் ஒரு ஜெனரேட்டரையும் கைப்பற்றியது. சந்தேக நபர் தல்அடிய பகுதியில் வசிப்பவர் என கண்டரியப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் டிங்கி, வெளிப்புற மோட்டார், பல்புகள், ஜெனரேட்டர் மற்றும் பிற மீன்பிடிபொருட்கள் முல்லைதீவு மீன்வள உதவி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்து.