எராக்கண்டி கடற்கரையில் கைவிடப்பட்ட ஒரு மீன்பிடிக் படகு கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படை இன்று (ஆகஸ்ட் 09) காலை எரக்கண்டி கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்பிடிப் படகொன்று கண்டுபிடித்தது.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் எரக்கண்டி கடற்கரையில் ரோந்து செல்லும் போது கைவிடப்பட்ட டிங்கி படகை கண்டுபிடித்தனர். அங்கு கடற்படை மேற்கொன்டுள்ள மேலதிக விசாரணையின் போது ஒரு சட்டவிரோத வலை, 20.2 கிலோகிராம் சட்டவிரோத மீன் மற்றும் ஒரு வெளிப்புற எரிப்பு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட டிங்கி படகு, வெளிப்புற எரிப்பு இயந்திரம், சட்டவிரோத மீன்பிடி வலைகள், சட்டவிரோத மீன்கள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களை மேலதிக விசாரணைகளுக்காக திருகோனமலை மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.