கடற்படை குடும்பங்களின் குழந்தைகளுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டது

2018 க.பொ.த சாதாரண நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற கடற்படையினரின் குழந்தைகளுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா உதவித்தொகை வழங்கினார். இலங்கை கடற்படை கப்பல் பரக்ரம நிருவனத்தின் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க ஆடியோரியமில் 2019 ஆகஸ்ட் 09 ஆம் திகதி இந்நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளதுடன் குழந்தைகளின் உயர்கல்வியைத் தொடர ஊக்கத்தொகையாக கடற்படையின் நலப் பிரிவினால் உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய கடற்படைத் தளபதி க.பொ.த. சாதாரண நிலைத் தேர்வின் சிறந்த முடிவுகள் பெற்ற குழந்தைகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார், அறிவு, மனப்பான்மை, திறன்கள் மற்றும் நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வதற்கும், இப்போது நாட்டின் பாடசாலைகளில் பரவி வரும் போதைப் பழக்கத்திற்கு அடிபணியாமல் எதிர்காலத்தில் வெற்றிபெற முயற்சிப்பதற்கும் இப்போதிலிருந்து இரண்டு ஆண்டுகளில் நடைபெறஉள்ள க.பொ.த. மேம்பட்ட நிலைத் தேர்வும் மாணவர்கள் அதிக புள்ளிகளுடன் பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும் என்றும் அவர் குறினார். மேலும் இந்த ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களில் நுழையும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, கடற்படையில் பணியாற்றும் போது ஓய்வு பெற்ற ஊனமுற்றோரின் இரண்டு (02) குழந்தைகள் மற்றும் தற்போது சேவையில் உள்ள கடற்படை வீரர்களின் 17 குழந்தைகளுக்கு, 2019 ஆகஸ்ட் மாதம் முதல் 2021 ஜூலை க.பொ.த. மேம்பட்ட நிலை தேர்வுக்கு அமர்வும் வரை தலா ரூ. 5,000.00 படி நன்கொடை வழங்கப்படுகின்றது.

இந்நிகழ்வுக்காக கடற்படை பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் நிலந்த ஹீனட்டிகல, பணிப்பாளர் நாயகம் நலத்துறை கமடோர் சேனரத் விஜேசூரிய உட்பட கடற்படை தலைமையகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் உதவித்தொகை பெற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.