நீரில் மூழ்கிய இரண்டு வெளிநாட்டினர் கடற்படையினரினால் மீட்கப்பட்டனர்

தெவுந்தர தலல்ல கடலில் மூழ்கிய இரண்டு வெளிநாட்டவர்கள், 2019 ஆகஸ்ட் 12 அன்று கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவு (4RU) அதிகாரிகள் மூலம் மீட்கப்பட்டனர்.

ஒரு சுற்றுப்பயணம் வந்து இருந்த வெளிநாட்டினர் குழு தெவுந்தர தலல்ல கடலில் குளித்துக் கொண்டிருந்ததுடன் அவர்களில் இருவர் நீரில் முழ்கியது.தெவுந்தர ஆலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கு வருகை தந்துள்ள பக்தர்களின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவு (4RU) அதிகாரிகள் , நீரில் மூழ்கிய வெளிநாட்டினரை உடனடியாக மீட்டு பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டது.

மீட்கப்பட்டவர்கள் 28 மற்றும் 47 வயதுடைய ரஷ்ய நாட்டில்சேந்தவர்கள் என கண்டரியப்பட்டனர்.

நாடு முழுவதும் கடலின் இயற்கை அழகைக் காண வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், ஆறுகள் மற்றும் உள் தொட்டிகளிலும் இலங்கை கடற்படை நிறுத்தப்பட்டதுடன் கடற்படை சுற்றுலாப் பயணிகளின் வாழ்க்கை பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளது.