நடுகுடா கடற்கரையில் இருந்து 83.6 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

2019 ஆகஸ்ட் 14, அன்று தலைமன்னார் நடுகுடா கடற்கரை பகுதியில் கடற்படை நடத்திய சோதனையின் போது 83.6 கிலோ கிராம் எடையுள்ள பீடி இலைகள் மீட்கப்பட்டன.

அதன் படி, வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய சோதனையின்போது, நடுகுடா கடற்கரை பகுதியில் கைவிடப்பட்டிருந்த இந்த பீடி இலை பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பொதிகள் யாழ்ப்பாணம் சுங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

மேலும், வட மத்திய கடற்படை கட்டளை கடந்த நாட்களில் மன்னார் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் தேடல்களின் போது ஏராளமான பீடி இலைகளை கைப்பற்றியது. கடற்படை தொடர்ந்து நடத்திய சோதனைகளின் காரணமாக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தாங்கள் கொண்டு வந்த பங்குகளை கைவிட்டு தப்பிக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. கடல்களில் சட்டவிரோத கடத்தல்காரர்களைப் பிடிக்க கடற்படை விழிப்புடன் இருக்கிறது.