வெடிபொருளைப் பயண்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஏலுபேர் (07) கடற்படையினரினால் கைது

திருகோணமலை, நோர்வேதீவுக்கு அருகில் உள்ள கடலில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேரை 2019 ஆகஸ்ட் 17 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

அதன்படி, நோர்வே தீவு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத வெடிபொருட்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந்த நபர்கள் கிழக்கு கடற்படை கட்டளையால் கைது செய்யப்பட்டது. அங்கு மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு டிங்கி படகு, வெளிப்புற மோட்டார் (ஓபிஎம்) மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 376 கிலோ கிராம் மீன்களும் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேக நபர்கள் முத்தூர் மற்றும் கின்னியாவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

07 சந்தேக நபர்களுடன் டிங்கி படகு, ஓபிஎம், மீன்பிடி பொருட்கள் மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன் ஆகியவை மேலதிக விசாரணைக்காக திருகோணமலை உதவி மீன்வளத்துறை இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இவ்வாரான சட்டவிரோத நடைமுறைகள் இலங்கை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் அமைப்புக்கு மிகவும் அழிவுகரமானதாக இருப்பதால், வெடிப்பு பெரும்பாலும் மீன்களை ஆதரிக்கும் அடிப்படை வாழ்விடங்களை அழிப்பதால், மீன் மற்றும் அதன் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்காக இத்தகைய நடைமுறைகளைத் தடுப்பதில் கடற்படை மிகவும் விழிப்புடன் உள்ளது.