உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட (ஷாட் கன்) துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது

இன்று (ஆகஸ்ட் 19) ஹம்பாந்தோட்டையில் சன்ஹிதகம பகுதியில் வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் ஒருங்கிணைப்புடன் கடற்படை நடத்திய சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட (ஷாட் கன்) துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் ஒருங்கிணைப்புடன், தெற்கு கடற்படை கட்டளை நடத்திய சோதனையில், சந்தேகத்திற்கிடமான நபரைத் விசாரித்த போது, உரிமம் இல்லாத இந்த உள்ளூர் (ஷாட் கன்) துப்பாக்கி, 110 ஈய பந்துகள் மற்றும் 20 கிராம் துப்பாக்கி தூள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

சந்தேகநபர் 24 வயதான ஹம்பாந்தோட்டை சமோதாகம பகுதியில் வசிப்பவர் என அடையாலம் காணப்பட்டுள்ளார்.மேலதிக சட்ட நடவடிக்கைக்காக, சந்தேகநபர் உள்ளூர்வாசிகளால் செய்யப்பட்ட (ஷாட் கன்) துப்பாக்கி, ஈய பந்துகள் மற்றும் துப்பாக்கி தூள் ஆகியவற்றை வனவிலங்கு பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.