சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை சாம்பூருக்கு வெளியே உள்ள கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் 2019 ஆகஸ்ட் 17 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்த சந்தேக நபர்கள், கிழக்கு கடற்படை கட்டளையால், சம்பூருக்கு வெளியே உள்ள கடல்களில் நடத்தப்பட்ட ரோந்துப் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர். ஒரு டிங்கிப்படகு, தடைசெய்யப்பட்ட வலை மற்றும் சில மீன்பிடி உபகரணங்களையும் கைப்பற்றியது. டிங்கி, மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களுடன் நபர்கள் சாம்பூர் மீன்வள இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அங்கீகரிக்கப்படாத வலைகளுடன் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட முயன்ற நபர்கள், கடந்த சில வாரங்களாக கைது செய்யப்பட்டு வருகின்றார்கள், எதிர்கால தலைமுறையினருக்கு மீன் மற்றும் பிற கடல் வளங்களை பாதுகாக்க இதுபோன்ற சட்டவிரோத செயல்களைக் குறைக்க கடற்படை முன்னோடியாக செயல்பட்டு வருகின்றது.