கொழும்பில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக திறக்கப்பட்ட நீர்வழி பயணிகள் படகு சேவைக்கு கடற்படை ஆதரவு

கொழும்பில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக பெருநகர மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சினால் தொடங்கப்பட்ட பயணிகள் படகு சேவைக்காக கடற்படையினரினால் தயாரிக்கப்பட்ட பயணிகள் படகு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இன்று (ஆகஸ்ட் 22) பிரதமர் கெளரவ ரணில் விக்ரமசிங்கவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார். கொழும்பு கோட்டை லேக் ஹவுஸ் அருகே மெக்கலம் கேட் அருகில் கட்டப்பட்ட படகு முற்றத்தில் இன் நிகழ்வு இடம்பெற்றது.

அதன்படி, ஒரே நேரத்தில் 50 பயணிகள் வரை பயனிக்க முடியும் இந்த பயணிகள் படகு இலங்கை கடற்படையினரினால் தயாரிக்கப்பட்டது,. இலங்கை கடற்படை மற்றும் இலங்கை நில மேம்பாட்டுக் கழகம் ஆகியவை கொழும்பு கோட்டை லேக் ஹவுஸுக்கு எதிரே உள்ள மெக்லம் கேட் அருகே படகு முற்றத்தில் இருந்து யூனியன் பிளேஸ் படகு பட்டறை வரை இயக்கப்படும். மேலும் இலங்கை கடற்படை இந்த படகு பயணித்தின் போது ஒரு பாதுகாப்பு முறையை பராமரிக்கிறது.