“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” கருத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் பல நிகழ்ச்சிகள் கடற்படையினரினால் நடத்தப்பட்டன

அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் "நாட்டுக்காக ஒன்றிணைவோம்" என்ற கருத்தாக்கத்தின்படி, யாழ்ப்பாணம் மற்றும் அங்குள்ள தீவுகளை மையமாகக் கொண்டு 2019 ஆகஸ்ட் 23 முதல் 26 வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் பல சமூக சேவைகள் நடைபெற்றன.

அதிமேதகு ஜனாதிபதியின் கருத்தின் படி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவின் வழிமுறைகளின் யாழ்ப்பாணத்தில் கரைநகர், மாதகல் மற்றும் வெத்தலகர்ணி பகுதிகளிலும், ஊர்காவற்துறை, மண்டதீவு மற்றும் புங்குடுதீவு பகுதிகளிலும் கடலோர துப்புரவு திட்டங்கள், நடவு திட்டங்கள், சட்டவிரோத மீன்பிடியின் இழுவை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் சிரமதான திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு திட்டங்கள் நடைபெற்றன. மேலும், பொதுமக்கள் சமூகத்துடன் ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் வெத்தலகர்ணி பகுதியில் நட்பு கிரிக்கெட் போட்டியொன்றும் நடைபெற்றடைன் நெடுன்தீவில் உள்ள பாடசாலைகளுக்கு பாதுகாப்பு குழுக்களும் அமைக்கப்பட்டன.

" நாட்டுக்காக ஒன்றிணைவோம் " என்ற கருத்தின் கீழ் வடக்கு கடற்படை கட்டளையில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டங்கள் அனைத்தும் உள்ளூராட்சி நிறுவனங்கள், குடிமை அமைப்புகள் மற்றும் இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றன, மேலும் சமூகம் ஆர்வத்துடன் இன் நிகழ்வுகளில் பங்கேற்றது.