கடற்படை மூலம் நிருவப்பட்ட முதன்மை சுகாதார நிலையம் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன

கடற்படையினரின் சிரமத்தால் காரைதீவில் நிர்மாணிக்கப்பட்ட கரைநகர் முதன்மை சுகாதார நிலையம் 2019 ஆகஸ்ட் 27 ஆம் திகதி மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன.

அதன் படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் மேற்பார்வையில் கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக இந்த முதன்மை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. குறித்த முதன்மை சுகாதார நிலையத்தை இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்தில் கட்டளை அதிகாரி கேப்டன் துஷார சுகததாச திறந்து வைத்தார். இன் நிகழ்வுக்காக மகா சங்கத்தினர் உட்பட மத குருக்கள், காரைநகர் பிரதேச சபைத் தலைவர், காரைநகர் பிரதேச சபா செயலாளர், பிரதேச சுகாதார சேவைகள் இயக்குநர், காரைநகர் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட வடக்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டது.