நைஜீரிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

நைஜீரிய பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் ஈஒ பெரெய்ரா அவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.