தடைசெய்யப்பட்ட 1410 நைலான் வலைகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் புத்தலம் மீன்வள உதவி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் ஒருங்கிணைந்து 1410 அங்கீகரிக்கப்படாத நைலான் வலைகளைக் கொண்ட ஒருவரை புத்தலம் முள்ளிபுரம் பகுதியில் வைத்து 2019 ஆகஸ்ட் 28 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

அதன்படி வடமேற்கு கடற்படை கட்டளை மற்றும் புத்தலம் மீன்வள உதவி இயக்குநர் அலுவலக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடத்திய சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு வீடு காணப்பட்டது. குறித்த வீடு மேலும் சோதிக்கும் போது அங்கு இருந்து 1410 சட்டவிரோத வலைகளை கண்டுபிடிக்கப்பட்டன. மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டவிரோத வலைகள் மற்றும் சந்தேகநபர் மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.