நோய்வாய்ப்பட்ட மீனவருக்கு கடற்படை கடலில் வைத்து மருத்துவ சிகிச்சை அளித்துள்ளது

2019 ஆகஸ்ட் 28, அன்று கடலில் நோய்வாய்ப்பட்ட ஒரு மீனவருக்கு கடலில் வைத்து கடற்படை அவசர மருத்துவ சிகிச்சை அளித்தது.

அதன் படி, லிதுலி 02 என்ற மீன்பிடிக் கப்பலில் இருந்த ஒரு நோய்வாய்ப்பட்ட மீனவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களத்தினால் கடற்படை தலைமையகத்திக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பின் பேரில் தெற்கு கடற்படை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை கப்பல் பரக்ரமபாஹு குறித்த பணிக்காக அனுப்பிவைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நோயாளியை உடனடியாக கப்பலின் மருத்துவர் மற்றும் மருத்துவ ஊழியர்களால் எடுத்துச் செல்லப்பட்டு ஆரம்ப சிகிச்சை வழங்கிய பின் நோயாளி மீன்டும் மீன்பிடிக் படகுக்கு ஒப்படைக்கப்பட்டார்.

இது போன்ற, இலங்கை கடல் பகுதியில் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மற்றும் கப்பல் சமூகத்திற்கு நிவாரணம் வழங்க கடற்படை எப்போதும் முயன்று வருகிறது.