“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” திட்டத்துடன் இணைந்து கடற்கரை துப்புரவு செய்யும் திட்டத்தில் கடற்படை பங்கேற்பு

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை கடற்படை இன்று (ஆகஸ்ட் 29) யாழ்ப்பாணம் தல் சேவன கடற்கரை பகுதியில் துப்புரவுப் பணியை ஏற்பாடு செய்தது.

இராணுவம், விமானப்படை, கடலோர பாதுகாப்புத் துறை மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் வடக்கு கடற்படை கட்டளை ஏற்பாடு செய்த இந்த திட்டம் மூலம் பல்வேறு காரணங்களால் மாசுபட்ட தல் சேவன கடற்கரையை சுத்தம் செய்யப்பட்டது.

இயற்கை பாதுகாப்பு தொடர்பான தனது திட்டங்களை அதிகரிக்க கடற்படை ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் இதேபோன்ற பல கடற்கரை சுத்தம் திட்டங்களை நடத்தி வருகிறது.