கடலில் மூழ்கும் அபாயத்தில் இருந்த 03 பேரை கடற்படை மீட்டுள்ளது

ஹிக்கடுவ மற்றும் சீனிகம இடையே கடலில் மூழ்கிகொன்டிருந்த மூன்று மீனவர்களை இலங்கை கடற்படை இன்று (ஆகஸ்ட் 30 மீட்டுள்ளது.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து ஹிக்கடுவ காவல்துறையினரிடமிருந்து தெற்கு கடற்படைத் தளபதிக்கு அழைப்பு கிடைத்ததும், கடற்படையின் விரைவான மறுமொழி மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவில் (4RU) இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. அதன்படி, கடற்படை வீரர்கள், கடினமான கடல் நிலைக்கு மத்தியில், நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்த 03 மீனவர்களை மீட்டனர்.

மேலும், இலங்கை பெருங்கடல் மண்டலத்தில் துன்பகரமான கடல் சமூகங்களுக்கு மற்றும் மீன்வள சமூகத்திற்கு உதவும் நோக்கில் நிவாரணம் வழங்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.