மேலும் மற்றொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது

யாழ்ப்பாணம் புங்கூடுதீவு பகுதியில் அமைந்துள்ள கண்ணாகி அம்மன் கோவில் வளாகத்தில் கடற்படையினரினால் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று 2019 ஆகஸ்ட் 30 அன்று, அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

அதன் படி சிறுநீரக நோய்களைத் தடுப்பதற்கான ஜனாதிபதி பணிக்குழுவுடன் இணைந்து கண்ணாகி அம்மன் கோவிலில் கடற்படையினரினால் நிருவப்பட்ட கடல் நீர் மறுசுழற்சி செய்யும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஜனாதிபதி அவர்களினால் கிலினோச்சி மண்டல கல்வி அலுவலகத்திலிருந்து டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா மற்றும் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சிறுநீரக நோயைத் தடுக்கும் ஜனாதிபதி பணிக்குழு மற்றும் இலங்கை கடற்படை இனைந்து சிறுநீரக நோய் பரவும் மாவட்டங்களை உள்ளடக்கி ஏராளமான நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவதில் ஈடுபட்டுள்ளன.